எலும்புகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை வேண்டும்

0

உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை போன்றன எலும்புகளின் நலனில் அதிகம் தங்கியுள் ளன.

இவற்றில் ஏற்படும் குறைபாடுகளால் எலும்புகளின் உறுதி மற்றும் ஆரோக்கியம் பாதிப்  படையும்.

அது தொடர்பான சில பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகள் வருமாறு,

1. அதிக உப்பு பண்டங்களை உட் கொள்ளல்.

சாதாரணமாக ஒரு நாளைக்கு உட் கொள்ளும் உப்பின் அளவு 2300 மி . கிராமினை விஞ்சாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உப்பின் அளவு இரத்த கல்சிய அளவைக் குறைப் பதனால் எலும் பின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். கருவாடு மற்றும் உப்பில் பதனிடப் பட்ட உணவு களைத் தவிர்த்தல் நல்லது.

2. தொலைக் காட்சி மற்றும் கணனியில் அதிக நேரம் செல வழித்தல்.

தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்கார்ந்து இருத்தலால் உடற் பயிற்சியின்மை காரணமாக எலும்புகளின் ஆரோக்கியம் பாதிப்படையும்.

3. இருளான பகுதிகளில் அதிக நேரம் கழித்தல்.

எலும்பின் வளர்ச்சிக்கு விற்றமின் D தேவை. இது சூரிய வெளிச்சம் மூலம் மட்டுமே தோலி னால் நுகரப் படுகிறது. வெளிச்சமே இல்லாத குளிரூட்டப்பட்ட அறைகளில் வசித்தல், ஒளி பு காத இடங்களில் அதிக நேரம் செலவழித்தல் என்பன எலும்பின் ஆரோக்கியத்தினைப் பாதிக் கும். தினமும் குறைந்தது 15 நிமிடங்களேனும் பூரண சூரிய ஒளியில் இருத்தல் வேண்டும்.

4. மது அருந்துதல்.

எப் போதேனும் மது அருந்துதல் கூட என்பின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். மதுப் பழக்கம் கல்சியம் படிதலை தடுப்பதனால் எலும்பின் உறுதி குன்றும்.

5. செயற்கைப் பானங்கள் அருந்துதல்.

காற்றூட்டிய பானங்களிலுள்ள காபன், பொஸ்பரசு என்பில் கல்சிய அடர்த்தியைக் குறைக்கும்.

6. அதிக பருமன் அல்லது குறைந்த பருமன்.

ஒவ் வொருவருக்கும் அவரது உடல் உயரத்திற்கு ஏற்ப உடற் பருமன் உண்டு. இதன் மூலம் BMI சுட்டி கணிக்கப்படும். போசணையாளரின் உதவியுடன் உங்களுக்குப் பொருத்தமான BMI சுட்டியை பராமரித்துக் கொள்ளவும்.

7. சிறு பராயத்தில் ஏற்படும் விபத்துக்கள்.

சிறு பிள்ளைகளை விழுந்து விடாமலும் அல்லது அவ்வாறு விழுந்து விட்டால் உடனடியாக மருத்துவரிடம் கூட்டிச் சென்றும் அவர்களது ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

8. மருந்துப் பாவனை.

ஸ்.ரீரொயிட் மருந்து போன்ற சில மருந்துப் பாவனைகள் எலும்பின் உறுதியைக் குறைக்கும், முடிந்தளவுக்கு மருத்துவர்களுடன் மருந்துப் பாவனையின் போதான பக்க விளைவுகள் குறித்து ஆலோசனை பெறவும்.

Leave A Reply

Your email address will not be published.

sixteen − ten =