விசேட அதிரடிப் படையினர் – மான் வேட்டைக்காரர்கள் துப்பாக்கிச் சூடு

ஒருவர் காயம் மற்றையவர் கைதானார்

0

உடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் வேட்டையாடிக்கொண்டிருந்த இரு சந்தேக நபர்களுக்கும் காவல்துறை அதிரடிப் படையினருக்குமிடையல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மற்றையவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயத்திற்குள்ளான நபர் மேலதிக சிகிச்சைக்காக காராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல் துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார்.

அத்துடன் அவர்களிடமிருந்து ரி-56 இனத் துப்பாக்கியும் அதன் 27 சன்னங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கொல்லப்பட்ட மான்களுடன் அவற்றின் இறைச்சியும் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளும்இடம்பெற்ற வருவதாக அறியமுடிகிறது.

Leave A Reply

Your email address will not be published.

two + eighteen =