முடமான குழந்தைகளின் பிறப்பால் பிரான்ஸில் பரபரப்பு.

0

பிரான்ஸ் நாட்டில் மூன்று வெவ்வேறு பிரதேசங்களில் கைகள், கால்கள் அற்ற குழந்தைகளின் பிறப்பு வீதம் அதிகரித்தமையால் அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகளிடையே பரபரப்பான கூழலமைவு உருவாகியுள்ளது.

இவ்வாறு அதிகளவான குழந்தைகளின் பிறப்பு அடிக்கடி பதிவாகியமையினை அடுத்து அந் நாட்டு அரசு தேசிய அளவில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

குறித்த விசாரணைகளின் போது கர்ப்பத்தின் போத வயிற்றுப்பகுதி முழுமையாக விருத்தியதைடயாமலும், கைகள் வளர்சியடையாமலும் முன் கைகள் விரல்கள்இல்லாமலும் பல குழந்தைகள் பிறந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஆனாலும் அந் நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளினால் சரியான காரணத்தை இது வரை கண்டறியாத நிலையில் சுவிஸ் நாட்டை அண்டிய கிராமப் பகுதிகளிலும் வடமேல் கரைப்பகுதியிலும் இவ்வகை குழந்தைகளின் பிறப்பு தொடர்ந்தும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

twelve − one =