அமரர் சிறிக்குமரனுக்கு மண்டைதீவு ஸ்ரீமுத்துமாரி அம்பாள் ஆலய பரிபாலன சபை இரங்கல் செய்தி

0

மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பரிபாலன சபையின் வரு டாந்த பொதுக்கூட்டம் 24.10.2018 புதன்கிழமை நடைபெற இருந்தவேளை சிறிக்குமரன் அவா் கள் காலமாகிய செய்தி கிடைக்கப்பெற்றமையால் அவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கூட்டத்தினை 11.11.2018ஆம் திகதிக்கு ஒத்திவைத்து சபையின் சாா்பாக  அவரது ஆத்மா சாந்தி பெற இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கும் தீா்மானம் நிறை வேற்றப்பட்டது.

தீா்மானத்தின் மீது பரிபாலன சபையின் தலைவா், செயலாளா், மண்டைதீவு சிவசக்தி இந்து இளைஞா் மன்றத்தின் தலைவா் திரு.ம.சசிகாந் (கிராம அலுவலா்), தோ்த்திருப்பணிச்சபை யின் தலைவா் திரு.ப.சுதானந்தராசா  (அதிபா்) ஆகியோா் அவர் ஆற்றிய நற்பணிகளை நினைவு கூா்ந்து உரையாற்றி அவரது ஆத்மா சாந்தியுற அன்னை முத்துமாரியை வேண்டிக் கொண்டனா்.

இதற்கமைவாக எமது ஆழ்ந்த இரங்கலை அவரது பிரிவால் துயருறும் துனைவியாா், பிள்ளை கள், சகோதரா்கள், சுற்றத்தாா், நண்பா்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி

மண்டைதீவு வேப்பந்திடல்
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள்
ஆலய பரிபாலன சபை
மண்டைதீவு.

Leave A Reply

Your email address will not be published.

3 − three =