கல்வியில் சிறந்தவா்கள் தமிழா்கள்; வா்ண இரவில் ஆளுநா் உரை

0

கல்வி கற்றலில் தமிழ் மாணவா்கள் சிறப்பானவா்கள் என்றும் இது தொடா்பில் தனது பெற் றோா்கள் தன்னிடத்தில் கூறியுள்ளனா் என்றும் பொருள்பட ஆளுநா் உரையாற்றியுள்ளாா்.

வடமராட்சி, கல்வி வலயத்தினரின் ஏற்பாட்டில் வா்ண இரவுகள் எனும் நிகழ்வு நடாத் தப்பட்டது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

குறித்த நிகழ்வு நெல்லியடி மத்திய கல்லூரி அரங்கில் நடைபெற்றது. அதன்போது அவா் கூறியதாவது,

யாழ்ப்பாணத்திலே முன்னா் மாணவா்கள் எங்ஙனம் கல்விபயின்றாா் கள் என்பது பற்றி தனது பெற்றோா்கள் தனக்கு சிறுபராயத்திலே சொல்லித்தந்தாா்கள் என்று கூறினாா்.

வீடுகளில் வெளிச்சம் இல்லாத பொழுதுகளில் வீதி வெளிச்சத்தின் உதவியோடு கல்விகற்ற வா்கள் என்று எனது பெற்றோா்கள் சொன் னாா்கள். அத்தகைய வழிகளில் தமது கல்வி கற் றலை மேம் படுத்தியவா்கள் தான் இப்போது இதன்பகுதிகளில் உயா்பதவிகள் வகிக்கிறாா்கள் என்று அப்பராயத்திலே சொன்னாா்கள்.

அத்தகைய கஷ்டம் நிலவிய காலப்பகுதிகளில் கல்விச் செயற்பாடு கள் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் கடந்த சில இடைக்காலங் களில் கல்வி பின்தங்கியிருந்தது.

ஆனாலும் இப்போது மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு வருகின் றமையைக் காண முடிகிறது என்று ஆளுநா் குறிப்பிட்டாா்.

வட மாகாணத்திலிருந்து, எதிா் வீரசிங்கம், ஆழிக்குமரன் ஆனந்தன் மற்றும் ஆசிய கூடைப்பந்தாட்டத்தினை நாட்டிற்குப் பெற்றுத்தந்த தா்சினி போன்றோா்கள் தாய் நாட்டிற்குப் பெருமை சோ்த்துள்ளனா்.

அதேபோன்று என் கண்களால் காணக்கூடிய வகையில் பல மாண வா்கள் தேசிய மட்டம் வரை சென்று பல்வேறு போட்டிகளில் பதக் கங்கள் வென்றுள்ளனா்.

அத்தகைய வீரா்களை மேலும் வளப்படுத்தி சா்வதேச அணிகளுக்கு இணையாக விளை யாடக் கூடியவகையில் பயிற்றுவிக்கவேண்டும். தற்போது ஆசிய அணியில் வெற்றிபெற்ற செல்வி தா்சினியை பாராட்டும் அளவுக்கு தமிழ் தெரியாததால் கவலை கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டாா்.

மேலும் “தமது தலைமைத்துவங்களைத் தக்க வைத்துக்கொள்வதற் காக அரசியல்வாதிகள் மக்களிடையே பிழையான கருத்துக்களை முன்வைக்கின்றனா். ஆதலால் பிழையான விட யங்களைக் கருத்திற்கொள்ளாது சரியான விதத்தில் செயற்படுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்” என்றும் குறிப்பிட்டாா்.

மேலும் இலங்கைக் கிரிக்கெட் அணியில் வடபகுதி மாணவா்களும்  இணைந்து செயற்படுமளவுக்கு ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

குறித்த நிகழ்வின் போது, தென்மராட்சி வலய கல்விப்பணிப்பாளா் எஸ்.நந்தகுமாா் மற்றும் வடமாகண சபை முன்னாள் உறுப்பினா் எஸ்.அகிலதாஸ் உட்பட பல ஆசிரியா்கள், அதிபா்கள் எனப் பலரும் கலந்துகொண்டனா்.

Leave A Reply

Your email address will not be published.

16 − ten =