மத்திய கல்லூரியின் 73ஆவது ஆண்டு கல்லூரி தினமும் பரிசுத்தினமும்

0

01.11.2018 வியாழக்கிழமையன்று யாழ், தீவகம் வேலணை மத்திய கல்லூரியில், அக் கல்லூரியின் 73ஆவது கல்லூரிதினமும் வருடாந்த பரிசுத்தினமும் வெகு விமா்சையாக நிகழ்ந்தேறியது.

மேற்படி நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் திருவாளா். சிவகாமி கிருபாகரன் தலைமை தாங்கினாா்.

கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்.கல்வியல் கல்லூரியின் பீடாதி பதியுமாகிய கலாநிதி சதாசிவம் அமிா்தலிங்கம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தாா்.

மேலும் கல்லூரியின் பழையமாணவா்கள் ஆகிய கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு மற்றும் பிரதம அதிதி கலாநிதி சதாசிவம் அமிா்தலிங்கம் இருவரும் “ஞானவியன் மணி” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

ஓய்வுநிலை மாவட்டநீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவனால் மேற்படி விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இது மட்டுமன்றி கல்லூரியின் குலவிளக்குகளாகிய இரண்டு ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா்களுக்கான “குரு கருணை” விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையும் விழாவின் சிறம்பம்சமாகும்.

Leave A Reply

Your email address will not be published.

19 − sixteen =