யுத்த வடுவும்; வாழ்வாதார சவாலும்

0

“யுத்தம்” உலக வரலாற்றில் ஒரு இனத்தின் அல்லது ஒரு நாட்டின் அல்லது ஒரு வாழ்வியல் இயல்பினை புரட்டிப்போட்ட சம்பவங்கள் இப் பூவுலகில் நிகழ்ந்தேறியுள்ளன.

இதனால் யுத்தம் நிகழ்ந்த பிரதேசங்களில் வாழ்வியல் பின்தங்கிப் போதலும் பொருளாதாரம் அபகரிக்கப்படுதலும் கண்கூடு.

அவ் வகையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தமும் இறுதிக்கட்டம் வரையில் பாரிய பின் னடைவுகளை இந் நாட்டின் சிறுபான்மை இனமான தமிழர்கள் மத்தியில் விதைத்துள்ளது.

எம் உறவுகளின் வாழ்வியல் சிதைக்கப்பட்டு வாழ்வாதார சவால் மிகுந்த பல்லாயிரக்கணக் கான குடும்பங்களை விளைவாக்கியது.

இதனால் யுத்தம் முடிந்து ஒரு தசாப்தம் நிறைவுற்ற போதிலும் இரண்டு சனாதிபதி ஆட்சி களை கண்ட போதிலும் வடக்கில் யுத்தத்தின் பின் முதலாவது வட மாகாண சபை அமைந் திட்ட போதிலும் இரண்டாவது உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் பெற்றிட்ட போதிலும் இன்னும் கந்தக நாற்றத்தையும் கடந்து வந்த துன்பியல் இன்னல்களையும் தினசரி ஞாப கப்படுத்துகிறது எம் மக்கள் அனுபவிக்கும் வாழ்வாதாரச் சவால்கள்.

யுத்தத்தால் இளம் குருத்துக்கள் கருகியதும் குடும்பத்தலைவர்கள் இறந்ததும் பல குடும்பங் கள் சிதைந்ததும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பல உருவாக்கப்பட்டதும் தாய் தந்தை யர்களை இழந்த அநாதைக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதும் மாற்று வலு உள்ள உறவுகள் உருவாக் கப்பட்டதும் தூண்களாய் இருந்த பல இளைஞர் யுவதிகள் விதைக் கப்பட்டதும் என்று எண்ணற்ற இன்னல்களை கடந்து எதிர்காலத்தை கேள்விக்குறியோடு எதிர்பார்த்து காத்திருந்த எம் மக்களுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் மட்டுமே.

வட மாகாண சபை உருவாக்கப்பட்ட போது எம் உறவுகளும் உலகமும் எண்ணற்ற எதிர்பார்ப் புக்களை பல கனவுகளை கொண்டிருந்தன.

ஆனால் வட மாகாண சபையோ பொன்னான தனது பயணத்தை ஒற்றுமையீனம் காரணமாக மண்ணாக்கி எம் உறவுகளை ஏமாற்றக்கடலினுள் மேலும் இட்டு சித்திரவதை செய்தமையை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு வட மாகாண சபையை சார்ந்த உறுப்பினர்களும் பிறரைக் காரணம் காட்டி தமது கடமைகளினின்றும் விலகிவிட்டனர்.

அதுபோலவே பாராளுமன்றம் சென்ற சிறுபான்மை பிரதிநிதிகளும் உரிமையைக் காட்டி மக்களின் வாழ்வாதார சவால்களை நிவர்த்தி செய்யும் சந்தர்ப்பத்தை பெற்றுத்தருவதில் முன்வரவில்லை. இதனால் உறவுகள் மீள் எழுச்சி பெற முடியாத பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் தமது வாழ்விடங்களை இழந்த நிலையில் இன்றும் வாழ்வாதார சவால்களினின்றும் தத்தளிக்கின்றனர்.

புலம் பெயர்ந்து வாழும் எமது உறவுகள் பனியிலும் பல இன்னல்களுக்கு மத்தியிலும் உழைத்து தமது உழைப்பின் ஒரு பகுதியை இங்குள்ள தொண்டு நிறுவனங்கள், உதவும் அமைப்புக் களினூடு பலதரப் பட்டவகைகளில் உதவித்திட்டங்களாக செயற்படுத்தி வருவ தனால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது உறவுகள் ஒரு பிடிமானத்தை பெற்றவர்களாக ஓரளவுக்கேனும் ஒரு சில சவால்களை வெற்றிகொள்ள கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

இப் புலம்பெயர் உறவுகள் வாழ்வியலின் இன்னல்களை நன்குணர்ந்தவர்கள். அவர்களது உழைப்பின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு கனவுகளைக் கொண்டது. பல இன்னல்களுடன் செயல் வடிவம் பெற்றது. அதனாலோ என்னவோ நம் மக்கள் படும் துயரை துடைப்பதற்கு அவர்கள் முன்வந்துள்ளார்கள்.

அதுபோல இங்குள்ள பல பாடசாலை பழைய மாணவர் அமைப்புக்களும் இதர தொண்டு நிறு வனங்களும் மேற்போர்ந்த செயற்பாடுகளினால் பல பாடசாலைகளை உயிர் ஊட்டியுள்ளனர். பல குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஒளியேற்றியுள்ளனர். அனாதரவற்றவர்கள் பலருக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இருந்தும் இவர்களால் செய்ய முடிந்தவற்றை அதிகார கதிரைகளை அலங்கரித்தவர்களால் செய்ய முடியாமல் போனதுதான் எம் உறவுகளின் துரதிஷ்டம்.

உறவுகளின் வாழ்வாதார சவாலை முடிவுறுத்த பல்வேறு நலத்திட்டங்களுடன் கூடிய அரசு அமைய இறைவன் தான் வழிவகுக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.

14 − 7 =