உத்தரபிதேசத்தில் பிரியங்கா காந்தியை களம் இறக்கிய காங்கிரஸ் – மாயாவதி அகிலேஷுக்கு அதிர்ச்சி

0

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸை கூட்டணியில் சேர்க்காமல் அவமானப்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சிக்கும், சமாஜ்வாடிக் கட்சிக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகை யில் உத்தரப்பிரேதச காங்கிரஸ் கட்சிக்கு பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

காங்கிரஸுக்கு இரண்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கிய மாயாவதியும், அகிலேஷும், காங்கிரஸை கூட்டணியில் சேர்ப்பதால் ஒரு பயனும் இல்லை என்றும் அறிவித்தார்கள். இதற்கு பழிதீர்க்கும் வகையில் உ.பி. காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தார்.

அப்போது நிலமையின் தீவிரத்தை புரியாமல் காங்கிரஸ் முடிவை கேலி செய்தார்கள். அதையும்தாண்டி, காங்கிரஸின் முடிவு பாஜகவுக்கே சாதகமாகும் என்றார்கள். ஆனால்இ திடீரென்று பிரியங்கா காந்தியை அரசியிலில் களம் இறக்கிய காங்கிரஸ் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இது உத்தரப்பிரதேச அரசியலுக்கு மாத்திரம் அல்லாமல் அகில இந்திய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராகுலுக்கு பதிலாக பிரியங்கா அரசியலுக்கு வந்தால் மக்கள் வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று பல ஆண்டுகளாக விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்இ பிரியங்காவின் திடீர் அரசியல் பிரவேசம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மட்டுமின்றி, அதன் கூட்டணிக் கட்சிகளிடமும் வரவேற்பை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திராவைப் போல தோற்றம் கொண்ட பிரியங்கா அமேதி, ரேபரேலி தொகுதிகளைத் தாண்டி பிரச்சாரம் செய்ததில்லை. ஆனால்இ உத்தரப்பிரதேச மக்களுக்கு நெருக்கமானவராக அவர் கருதப்படுகிறார். அவருடைய தோற்றமும், அணுகுமுறையும் வாக்காளர்களை எளிதில் ஈர்க்கும் என்றே கருதப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =