யுத்தம் முடிவடைந்து விடுவிக்கப்படாத விளைநிலங்கள் சுவீகரிப்பதை எதிர்த்து கடிதம் மூலம் கோரிக்கை

0

1990 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்த சூழமைவு காரணமாக வாழ்விடம் விட்டு இடம்பெயர்க்கப்பட்ட மண்டைதீவு மக்கள் வாழ்வாதரச் சவால்களுக்கு முகம் கொடுப்பவர்களாகவே இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

இன்றும் அவர்களின் வாழ்வாதார தொழிலான விவசாயம் செய்வதற்குரிய விளை நிலங்களில் பல பகுதி குறிப்பாக முதலாம் வட்டாரம் ஜே/7 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தோட்டக் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமன்றி மேற்படி காணிகளுள் குடியிருப்புக்காணிகளும் அடங்குகின்றன.

சுமார் 20 ஏக்கர் மேட்டு விவசாயக்காணிகளையும் குடியிருப்புக்காணிகளையும் மீட்டுத்தருமாறும் தமற்போது நில அளவை செய்யப்படும் தறுவாயில் உள்ள சந்தர்ப்பத்தினை தவிர்த்து எமது காணிகளை எம்மிடமே மீளளித்து இழந்து போன வாழ்வை மறுசீரமைக்கவும் வாழ்வாதாரச் சவால்களில் இருந்து எம்மை மீட்கவும் உரிய கவண செய்யுமாறும் மாவட்ட நில அளவை அத்தியட்சருக்கு கடிதம் மூலம் மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் 11.04.2019 அன்று வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலய முன்றிலில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.