இலாபம் குறைவால் ஊழியர்கள் பணி நீக்கம்

0

உலகில் மென்பொருள் துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனம் (COGNIZANT) ஒரு அமெரிக்கா நிறுவனம்  ஆகும் . அந்த நிறுவனத்தில் தற்போது 2019- ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் காக்னிசெண்ட் நிறுவனத்தின் (COGNIZANT) நிகர லாபம் 441 மில்லியன் டாலராக சரிந்துள்ளது.சென்ற ஆண்டு இதே காலாண்டில் காக்னிசென்ட் நிறுவனத்தின் நிகர லாபம் சுமார் 520 மில்லியன் டாலரை எட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது .அதே போல் மறுபக்கம் வருவாய் 5.1 % அதிகரித்து 4.11 பில்லியன் டாலராக உள்ளதாக காக்னிசென்ட் அறிவித்துள்ளது.

மேலும் இந்நிறுவனம் கூறுகையில் லாபம் குறைந்துள்ளதால் “REALIGNMENT PROGRAM” என்ற திட்டத்தை கையில் எடுக்க உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் , நிர்வாகம்  மற்றும் ஊழியர்களிடையில் பல புதிய மாற்றத்தைச் செய்யவுள்ளது.

இதே போன்று 2017 ஆம் ஆண்டு ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் இந்நிறுவனம் ஈடுபட்டது. தில் 400க்கும் மேற்பட்ட மூத்த ஊழியர்களை விருப்ப ஓய்வு கொடுத்து காக்னிசென்ட் நிறுவனம் வெளியேற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆண்டுக்கு சுமார் 60மில்லியன் டாலர் வரை செலவு குறைந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் தற்போது எத்தனை பேர் இந்நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் . தில் இந்திய ஊழியர்களும் உள்ளார்களா என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

seventeen + fifteen =