விரைவில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் நாசர், விஷால்

0

கடந்த 18ஆம் திகதி ஒக்டோபர்  2015ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது.  இந்தத் தேர்தலில், நாசர் தலைமையில் ஒரு அணியும், சரத்குமார் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டது.

பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற கடந்த தேர்தலில், 1,824 பேர் நேரடியாக வந்து வாக்களித்தனர்.

மேலும், தபால் மூலம் 7ஆயிரத்து 83 பேர் வாக்களித்தனர். அஜித், நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட 532 பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று மாலை 6 மணிக்கு தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை, நள்ளிரவுவரை எண்ணப்பட்டது. கடும் போட்டிக்கு இடையே, நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களின் பதவிக்காலம், கடந்த வருடம் (2018) அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அந்த சமயத்தில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால், தேர்தலை 6 மாதங்களுக்குத் தள்ளி வைப்பதாக தற்போது பதிவியில் இருக்கும் அணி அறிவித்தது. தற்போது கட்டிட வேலைகள் கடைசி கட்டத்தை எட்டியிருப்பதால் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தேதி குறித்து அறிவித்துள்ளனர்.

இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் நிலையில் மற்ற பதவிகளில் இருப்பவர்கள் இந்த முறையும் அதே பதவிக்காக போட்டியிடுகிறார்களா என்பது தெரிய வில்லை. குறிப்பாக விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறாரா என்பது தெரியவில்லை.

 

Leave A Reply

Your email address will not be published.

19 + fifteen =