இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடத்தில் சித்தி

0
இலங்கை நிர்வாக சேவை தரம் III க்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் மண்டைதீவு எட்டாம் வட்டாரத்தைச் சேர்ந்த  இராசரத்தினம் பரணீகரன் தேசிய ரீதியில் முத லாமிடத்தில் சித்தியடைந்து தெரிவாகியுள்ளார்.
அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தில் சித்தியடைந்த இ.பரணீகரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர் என்பதுடன், தெல்லிப்பழை பிர தேச செயலகத்தில் கிராம அபிவிருத்தி உத்தி யோகத்தராகக் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை நிர்வாக சேவை தரம் மூன்று மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில்  சித்தியடைந்தவர்களில் நாடளாவிய ரீதியில் 46 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவர் களுக்கான நியமனம் இன்று வழங்கப்படவு ள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

5 × five =