அபாய நிலையில் மாணவர்கள், வேலியில் தொங்கும் மின் இணைப்பு கம்பி

0

வேலணை தெற்கு ஐயனார் வித்தியாசாலைக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்திற் கென மின் இணைப்பினை மின்சார சபை வழங்கியநிலையில் குறித்த மின் இணைப்பிற் குரிய இணைப்புக் கம்பியானது மைதான வேலியில் தொடுகையில் உள்ளது.

இப்பகுதியை குறித்த பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் தினமும் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் இவ்விடத்திற்கு அண்மையாக குடிநீர் வசதியும், மலசலகூட வசதியும் காணப்படுவதனையும் அவதானிக்கமுடிகிறது.

இத்தகைய பாராமுகமான செயற்பாடு ஆபத்து விளைவிப்பதற்கு முதல் இதற்கு பொருத்த மான இணைப்பு வசதியினை ஏற்படுத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களது தலையாய கடமையாகும்.

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =