சபாநாயகர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம்…

0

இலங்கை  நாடாளுமன்றின் சபாயநாயகர் கரு ஜயசூரிய இன்று (2018 .10 . 28) சனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் நாடாளுமன்றில் பிரதம மந்திரியாக பெரும்பான்மை நிரூபிக்கப் படும் வரையில் ரணில் விககிரம சிங்க வின் சிறப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி , சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் இலங்கை அரசியலமைப்பின் 42 (4) ஆம் பிரிவிற்கமைய ரணில் விககிரமசிங்க வின் சிறப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்டுக் கொண்டனர்.

அவ்வகையில் சனாதிபதிக்கான கடிதத்தில்…

நாட்டில் எழுந்துள்ள அரசியலமைப்பு நெருக்கடியின் பின்னணியில் நாடாளுமன்றின் அனைத்து உறுப்பினர்களதும் சிறப்புரிமையைப் பாதுகாப்பது சபாநாயகராகிய எனது முதற் கடமை என்று கருதுகிறேன்.
நாடாளுமன்றில் எவரேனும் பெரும்பான்மைப் பலத்தை வெளிப்படுத்தி நாடாளுமன்றப் பலத்தினை வெளிப்படுத்தும் வரை ரணில் விககிரமசிங்க வின் சிறப்புரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை என்னிடம் முன் வைக்கப்பட்டுள்ளது.

இக் கோரிக்கையினை சனநாயக ரீதியானதும் நியாயமானதுமாக நான் கருதுகின்றேன்.

ஆதலால் இலங்கை அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையிலும் நல்லாட்சி அரசாங்கத்தையும் சனநாயகத்தையும் பாதுகாக்கக் கூடிய ஆணைக்குரியவர் என்ற வகையிலும் மேற்படி கோரிக்கையைக் கருத்தில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Leave A Reply

Your email address will not be published.

seventeen − seventeen =